Translate

Sunday, May 17, 2015

அவனின்றி ஓர் அணுவும் அசையாது

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’
என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச்
செய்யவில்லை?கிருஷ்ணன்
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம்
முதலே, அவருக்குப் பணிவிடைகள்
செய்து,
தேரோட்டி, பல்வேறு சேவைகள்
புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில்,
தனக்கென
நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம்
கேட்டதில்லை. துவாபரயுகத்தில்,
தமது அவதாரப் பணி முடித்து விட்ட
நிலையில்,
உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த
அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும்,
நன்மைகளும் பெற்றிருக்கின்ற
னர்.ஆனால்,
நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன்.
உங்களுக்கும்
ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க
நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,
சிறு வயது முதலே கண்ணனின்
செயல்களைக்
கவனித்து வந்த உத்தவருக்கு, சொல்
ஒன்றும்,
செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்
லீலைகள்,
புரியாத புதிராக இருந்தன.
அவற்றுக்கான
காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள
விரும்பினார். "பெருமானே! நீ வாழச்
சொன்ன
வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய
வழி வேறு! நீ
நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற
பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,
எனக்குப்
புரியாத விஷயங்கள் பல உண்டு.
அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய
ஆவலாக இருக்கிறேன்.
நிறைவேற்றுவாயா?"
என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா!
முதலில்
எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்
ணா! நீ
பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள்
ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக
நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப்
போவதையும்
நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’
என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட,
முன்னதாகவே சென்று, 'தருமா!
வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’
என்று தடுத்திருக்கலாம்
அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?
போக
ட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம்
அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,
வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கல
ாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்;
தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்
தண்டனையாக,
அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த
போதாவது, நீ
சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம
்.
அதையும் நீ செய்யவில்லை.
'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப்
பணயம்
வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும்
திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான்
துரியோதனன். அப்போதாவது,
உனது தெய்வீக
சக்தியால், அந்த பொய்யான பகடைக்
காய்கள்
தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும்
செய்யவில்லை. மாறாக, திரௌபதியின்
துகிலை உரித்து, அவளின் மானம்
பறிபோகும்
நிலை ஏற்பட்ட போதுதான் சென்று,
';துகில்
தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’
என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்
ஒருவன், குலமகள் சிகையைப்
பிடித்து இழுத்து வந்து, சூதர்
சபையில் பலர்
முன்னிலையில், அவள் ஆடையில்
கை வைத்த
பிறகு, எஞ்சிய மானம் என்ன
இருக்கிறது?
எதனைக் காத்ததாக நீ
பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்
பாந்தவன்? இந்த
நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ
செய்தது தருமமா?';'; என்று கண்ணீர் மல்கக்
கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல்
மட்டுமன்று;
மகாபாரதம் படித்துவிட்டு நாம்
அனைவருமே கேட்கும்
கேள்விகளே இவை.
நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம்
கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம்
உள்ளவனே ஜெயிக்க வேண்டும்
என்பது உலக தர்ம
நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம்
தருமனுக்கு இல்லை. அதனால்தான்
தருமன்
தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர்
ஏதும்
புரியாது திகைத்து நிற்க, கண்ணன்
தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்
தெரியாது.
ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும்,
ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான்
வைக்கிறேன். என் மாமா சகுனி,
பகடையை உருட்டிச் சூதாடுவார்’
என்றான்
துரியோதனன்.
அது விவேகம்.தருமனும்
அதுபோலவே விவேகத்துடன்
செயல்பட்டு,
'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால்,
என்
சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'
என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும்
நானும் சூதாடியிருந்தால், யார்
ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும்
எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்
காய்களில் போடத்தான் முடியுமா?
அல்லது,
அவன் கேட்கும்
எண்ணிக்கைளை என்னால்தான்
போட முடியாதா? போகட்டும். தருமன்
என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள
மறந்துவிட்டான்
என்பதையாவது மன்னித்து விடலாம்.
ஆனால்,
அவன் விவேகமில்லாமல்
மற்றொரு மாபெரும்
தவறையும் செய்தான். 'ஐயோ!
விதிவசத்தால்
சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால்,
இந்த
விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும்
தெரியவே கூடாது. கடவுளே! அவன்
மட்டும்
சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க
வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான்.
என்னை மண்டபத்துக்குள் வர
முடியாதவாறு,
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான்
அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான
்.யாராவது தனது பிரார்த்தனையால்
என்னைக்
கூப்பிட
மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில்
காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும்,
அர்ஜுனனையும், நகுல-
சகாதேவர்களையும்
வைத்து இழந்தபோது, அவர்களும்
துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள்
கதியை எண்ணி நொந்து கொண்டும்
இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட
மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற
துச்சாதனன்
சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக்
கூப்பிட்டாளா? இல்லை. அவளும்
தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து,
வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய,
என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..
துச்சாதனன் துகிலுரித்த போதும்
தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...
ஹரி...
அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல்
கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய
மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான்
எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க
வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என்
மீது என்ன
தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா!
அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை.
உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ
வருவாயா? நீயாக,
நீதியை நிலை நாட்ட,
ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ
வரமாட்டாயா?" புன்னகைத்தான் கண்ணன்.
"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம
வினைப்படி அமைகிறது. நான்
அதை நடத்துவதும் இல்லை; அதில்
குறுக்கிடுவதும் இல்லை. நான்
வெறும்
'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம்
அருகில்
நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!
அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள்
செய்யும் தீமைகளையெல்லாம்
பார்த்துக்
கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத்
தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக்
குவித்து, துன்பங்களை அனுபவித்துக்
கொண்டே இருக்க வேண்டும்.
அப்படித்தானே?"
என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின்
உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள்.
நான் சாட்சி பூதமாக அருகில்
நிற்பதை நீங்கள்
உணரும் போது, உங்களால்
தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்
செய்ய முடியாது. அதை நீங்கள்
மறந்துவிடும்
போதுதான், எனக்குத் தெரியாமல்
செயல்களைச்
செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்
நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத்
தெரியாமல் சூதாடலாம் என்று தருமன்
நினைத்தானே, அதுதான்
அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும்,
எல்லோருடனும் இருப்பவன்
என்பதை தருமன்
உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக
முடிந்திருக்கும்
அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில்
ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான
தத்துவம்!
எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப்
பூஜிப்பதும்,
பிரார்த்தனை செய்வதும்,
அவனை உதவிக்கு அழைக்கும் ஓர்
உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும்
அசையாது" என்ற
நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில்
நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்?
அதனை மறந்துவிட்டு எப்படிச்
செயலாற்ற
முடியும்? இந்த தத்துவத்தைதான்
பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச்
செலுத்தி வழிநடத்தினானே தவிர,
அர்ஜுனன்
இடத்தில் தானே நின்று அவனுக்காகப்
போராடவில்

Saturday, May 16, 2015

காயத்ரி மந்திரம் -ஒரு பார்வை

உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம். உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம். இதை நான் சொல்ல விரும்பினாலும் எனக்கு முன்னால் ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே. (டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச் சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின் முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக வடிகட்டினபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தார். அப்படி என்ன கண்டுபிடித்தார்? 1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில் வெளிவருகிறது. 2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட உலகத்திலேயே சக்தி அதிகம்.. 3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது. 4.ஜெர்மனியில் ஹாம்பர்க் சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர் வாழ உடலுக்கும் மனதுக்கும் அது தெம்பு கொடுப்பதை அறிந்தது. 5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற நாட்டில் தினமும் மாலை ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம் ரெண்டு வருஷத்துக்கும் மேலே ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம். இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்? 2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால் சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது . அதற்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு வந்தது என்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் பல நூற்றாண்டுகளுக்கு மேல் நாட்டார்களுக்கு மட்டும் அல்ல, ஹிந்துக்களாகிய நம்மில் அநேகருக்கும் காயத்ரி மந்த்ரம் தெரியாது. தெரிந்தவர்கள் இதை ரகசியமாகவே பல காலம் மூடி மறைத்தார்கள். அதுவும் பெண்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதோடு பிராமணரல்லாதவர் க்கும் இது தேவையில்லை என்றும் சொல்லப்பட்டது. அந்த காயத்ரி தேவியே மனது வைத்தாளோ என்னவோ இன்று உலகமுழுதும் காயத்ரி மந்த்ரத்தின் மகிமை பரவி ஓங்கி ஒலிக்கிறது . அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே. காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே. உள்ளாம் கவர்ந்து, திறந்து,பரம்பொருளை நாடும் இந்த மந்திரம்,உலகில் எவ்வுயிர்க்கும் பொருந்தும். பல வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தில் முதலில் சந்திரனில் காலடி படித்த ஆம் ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரர் பிரபஞ்சத்தில் சந்திரனை நோக்கி இறங்கும்போது ஓம் என்ற மனம் கவரும் சப்தம் கேட்டது என்று எழுதினகாக, படித்த ஞாபகம். வேறுசிலரும் இதை பற்றி படித்திருக்கலாம். அறிந்திருக்கலாம். தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி, மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக் கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம். இது மனித குலத்திற்கு கிடைத்த விலையில்லா பரிசு. சுத்தமான இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம் உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம் தருகிறது. 'ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்" காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள். அது எவன் காதில் விழுகிறதோ அவனே புனிதமாகிறான். ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம் அல்லவா அது?. காயத்ரி என்றால் என்ன? ''காய"" என்பது உயிரூட்டும் சக்தி. ''த்ரி'' என்றால் அது செய்யும் மூன்று வேலை: அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது, பரமனிடம் கொண்டு சேர்க்கிறது. வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம் இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும் மற்றொன்று அதி உன்னதமானது. எப்படி எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து, காலேஜ் வரை போகிறோமோ அப்படி. புரிகிறதா? இந்த காயத்ரி மந்த்ரம் தான் நம்மை கடத்திச்செல்லும் ஸ்கூல் வேன் . காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப் பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ், உள்ளே இருக்கும்ஓஜஸ் வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24 அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம சரரஆத்மாவின் குரல் அது. காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம் போட்டோ, ஆலாபனத்தோடா, பக்க வாத்யத்தோடா பாடுவார்கள்? சிலர் செய்வது வேதனையாக இருக்கிறது. அது மனத்தை தொடவில்லை. மந்த்ரத்து க்கெல்லாம் அதற்கென்று உச்சரிப்பு, ஒரு முறை இருக்கிறது. அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு தக்க குரு உபதேசத்தோடு சொன்னால் கைமேல் பலன். பழம் பழுக்கும் காயத்ரி மந்த்ரம். ---------------------------- ‘’ ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேணியம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ ப்ரசோதயாத்’’ நண்பர்களே, எமது அன்றாட வாழ்கையில் நாம் எத்தனையோ தடவைகள் இந்த மந்திரத்தை சொல்லி இருக்கிறோம். ஆனால் பொருள் உணர்ந்து சொல்லும்போது அதன் பலம அதிகம். தினமும் காயத்ரி மந்திரத்தை செபிப்போம். சிறந்த வாழ்கையை வாழ்வோம். பொருள்: --------------- 'பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந் தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்தப் பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும்' என்பது தான் காயத்ரி மந்திரத்தின் பொருள். காயந்திரி மந்திரம் மறைந்ததா?, மறைக்கப் பட்டதா...? ----------------------------------------------------- காயத்ரி மந்திரம் என்பது அநேகமாய் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்....ஆனால் இந்த தொடர் அது பற்றியதல்ல, தலைப்பை இன்னொரு முறை தீர்க்கமாய் படித்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம். இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை தொடர்ந்து முறையாக ஜெபித்து வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும் அருளக் கூடியது. மேலும் இவர்களுக்கு எந்த தீங்கும் நேராது என்கிற நம்பிக்கையும் உள்ளது. காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம், வாக்கு , காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் என்றும் கூறப் படுகிறது.ஞானத்தின் உயரிய நிலையான பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி உபதேசத்தை "பிரம்மோபதேசம்" என்றும் கூறுகின்றனர். "வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை உணர்த்தும். இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர். இவர் காயத்தையே (உடலை) திரியாக எரித்து மாகா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர். விசுவாமித்ர முனிவரால் அருளப்பட்ட காயத்ரி மந்திரம் இதுதான்...சமஸ்கிருத மொழியில் அமைந்திருக்கிறது இந்த மந்திரம்.... "ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்" இத்தனை சிறப்பான காயத்ரி மந்திரம் பற்றி திருமூலர் தமிழில் இப்படி சொல்கிறார்... காயத்திரியே கருது சாவித்திரி ஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னி நேயத்தேர்ரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே! - திருமூலர் - இந்த இடத்தில்தான் நெருடல் வருகிறது. பொதுவாக சித்தர்கள் மந்திரங்கள் அனைத்துமே தமிழிலேயே இருக்கின்றது அப்படி இருக்க திருமூலர் சொல்லும் காயத்திரி மந்திரம் வேதங்களில் சொல்லப்பட்ட சமஸ்கிருத காயத்ரி மந்திரமா? அல்லது சித்தர்கள் தங்களுக்கென தனியான காயத்ரி மந்திரம் சொல்லி இருக்கிறார்களா? அப்படி சொல்லி இருந்தால் அது என்ன? இந்த கருத்துக்கள் அனைத்துமே கடுமையான விமர்சனம் அல்லது விவாதங்களை உருவாக்க கூடியவை. எனவே பதிவின் சாரத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன், பிழையிருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும், வருத்தங்களை தெரிவிக்கவும் தயாராக இருக்கிறேன். பழந்தமிழகத்தில் சாதியில்லை, மதம் இல்லை, இயற்கையையே வணங்கினர். மொழி சிறந்து, கலைகள் மிளிர்ந்து, நுட்பங்கள் உயர்ந்திருந்தன. ஆணும், பெண்ணும் சமூகத்தில் சம அங்கமாய் வாழ்ந்திருந்தனர். ஆதியில் இதுவே மெய்யான தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரமாய் இருந்தது. விந்திய மலைக்கு தெற்கே ஆரியர்கள் மற்றும் களப்பிரர்களின் அழுத்தமான சுவடுகள் பதிய ஆரம்பித்த பின்னர் அவர்களின் கலாச்சாரம் தமிழர்களின் மீது வலுவாக திணிக்கப் பட்டது.இன்றைய நமது தமிழும், கலாச்சாரமும் இந்த இரு பிரிவினரின் பாதிப்புகளின் எச்சம்தான். தமிழின் நுட்பங்கள் மற்றும் செறிவான மொழியியலை தாங்கள் உணர்ந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டதே சமஸ்கிருதம் (சம - இணை , கிருதம் - மொழி ) என்கிற சர்ச்சையான கருத்து உள்ளது. காலப் போக்கில் இவ்வாறு மொழி மாற்றம் செய்யப் பட்டவைகளை ஆரியர்கள் தங்களுடையதாகக் கூறி அவற்றில் தங்களின் கற்பனாவாத மூட நம்பிக்கைகளை உட்புகுத்தி, கடவுளின் பிரதி நிதிகளாக தங்களை நிறுவிக் கொள்ளும் முகமாக சடங்குகள், வழிபாட்டு முறைமைகள், பாவபுண்ணிய தீர்மானங்களை தமிழர்களின் மீது திணித்தனர். இன்னும் தெளிவாக சொல்வதாயின், பரிதிமாற்கலைஞரின் ”தமிழ்மொழியின் வரலாறு” என்ற நூலின் எட்டாவது பக்கத்து வரிகளைத் தருகிறேன்.... “தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்" இது தொடர்பாக மேலதிக தகவல் வேண்டுவோர், புலவர் அறிவுடைநம்பி, சிலம்பு நா.செல்வராசு மற்றும்மொழியியல் அறிஞரான Avram Noam Chomsky ஆகியோரின் நூல்களை வாசித்தறியலாம். இனையத்தில் கூட இது பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இந்த பதிவின் நோக்கம் அவற்றையெல்லாம் அலசுவதில்லை. தமிழில் இருந்து இவ்வாறு மொழிமாற்றம் செய்யப் பட்டவைகளில் ஒன்றுதான் காயத்ரி மந்திரம் என்ற கருத்து உள்ளது. காயம் = உடல், திரி = உயிர், மந்திரம் = காக்கும், உடலையும் உயிரையும் பேணிக் காக்கும் கவசம் காயந்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த மூல மந்திரத்தின் மொழிபெயர்ப்பு அல்லது இனையான உச்சரிப்புகளைக் கொண்டதே தற்போது புழக்கத்தில் இருக்கும் காயத்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த மந்திரம் காலம் காலமாக குருமுகமாக மட்டுமே உபதேசிக்கப் பட்டு வந்தது... பரவலாக அறியப் படாமல் காயந்திரி மந்திரம் மறைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பழந்தமிழர்கள் ஐந்து வகையான காயந்திரி மந்திரங்களை பயன் படுத்தியதாக தெரிகிறது. இந்த மந்திரங்களை எவரும் பயன் படுத்தலாம் என்கின்றனர். கருவூரார் அருளிய காயந்திரி மந்திரத்தினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். "ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக.! தத்துவ வித்துக்கள் அரணாகுக.! பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.! தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!" இதன் உச்சரிப்புகள் நாம் இப்போது புழக்கத்தில் வைத்திருக்கும் காயத்ரி மந்திரத்தின் ஓசைகளை ஒத்திருப்பதை எவரும் அவதானிக்கலாம். இதன் மகத்துவத்தை காகபுசுண்டர் பின் வருமாறு கூறுகிறார் "மவுனமே இப்படித்தான் செய்யும் பொய்யோ வாய்க்குமல்லோ காயந்திரி வலுவே செய்யும் கெவுனமே மேல்கிளப்பும் தொழிலே தானே கேசரத்தில் ஏற்றி வைக்கும் சித்தி தானும் மவுனமேயென்று சொன்னார் முன்னோரெல்லாம் வந்தவர்கள் கண்டு கொண்ட வகையிதாமே ரவிதனை மறவாமல் நோக்கி நோக்கி காயத்ரி செபஞ்செய்து இருந்து பாரே" - காகபுசுண்டர் - இந்த காயந்திரியை பயன்படுத்தி எவ்வாறு பலனடைவது என்பதைப் பார்ப்போம்.. காயந்திரி சூரியனை நோக்கி சொல்லப் படும் மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று கொண்டோ, அல்லது பத்மாசனத்தில் அமர்ந்தோ ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு முறை மனதுக்குள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். உடலும்,உதடும் அசையாமல் மனதை ஒரு நிலைப் படுத்தி உச்சரிப்பதே சிறப்பு. இந்த மகா மந்திரத்தினை காலையிலும், மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு, யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர் நிலைகளும் சித்திக்கும். இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்வதே சிறந்தது.இந்த மகா மந்திரமே எந்த நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும், இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக (உயிர்) இருந்து காக்கும் என்று கூறியுள்ளனர் சித்தர்கள். இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்திடுவோம். சிவ சிவ சிவ சிவ நமசிவாய................

Wednesday, May 13, 2015